தானே, திவா இடையில் புதிய 2 ரயில் பாதைகள்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணிக்கிறார்!
By : Thangavelu
மத்திய ரயில்வே வழித்தடங்களில் கல்யாண் மிகவும் முக்கியமான சந்திப்பு ரயில் நிலையமாக அமைந்துள்ளது. இதில் கல்யாண், சி.எஸ்.எம்.டி. இடையில் 4 ரயில் பாதைகள் இருக்கிறது. இதில் 2 பாதைகளில் ஸ்லோ மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. மற்ற இரண்டு பாதைகளில் விரைவு மின்சார ரயில்களுடன் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது.
மேலும், அதிகமான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில் நீண்ட தூர ரயில்களால் மின்சார ரயில்களை தாமதமாக இயக்கும் நிலை இருக்கிறது. எனவே இந்த தாமதத்தை தடுக்கின்ற வகையில் தானே, திவா இடையில் ரூ.620 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக இரண்டு வழிப்பாதைகள் அமைக்கும் பணிகள் முடிந்திருக்கிறது.
இந்த பாதையில் 1.4 கி.மீ. நீள ரயில்வே மேம்பாலம் மற்றும் 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்கள் என அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழா மாலை 4.30 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi