Kathir News
Begin typing your search above and press return to search.

மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு லாபத்தை அளித்துள்ள புதிய வேளாண் சட்டங்கள்.!

மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு லாபத்தை அளித்துள்ள புதிய வேளாண் சட்டங்கள்.!

மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு லாபத்தை அளித்துள்ள புதிய வேளாண் சட்டங்கள்.!

Saffron MomBy : Saffron Mom

  |  16 Feb 2021 10:57 AM GMT

கடந்த ஆண்டு மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட மூன்று பண்ணை சட்டங்களும் மகாராஷ்டிராவில் உள்ள விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு(FPC) விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களை வெளிச் சந்தைகளில் விற்க உதவியளிக்கின்றது.

வாட்ஸ்ஆப் குரூப் வழியாகவும் குறுஞ்செய்தியாகவும் அன்றைய மார்க்கட் விலை குறித்த தகவல்களை விவசாயிகள் பெறுகின்றனர். இதன்மூலம் அவர்கள் உற்பத்தி பொருட்களை APMC மண்டிகளில் விற்கலாமா அல்லது FPC மையங்களில் விற்கலாமா என்பது குறித்தும் முடிவு செய்கின்றனர்.

400 FPC கூட்டமைப்பைக் கொண்ட மகாராஷ்டிராவின் FPC நிறுவனம் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை APMC தவிர வெளி இடங்களில் விற்பனை செய்யும் சுதந்திரத்தை அளிக்கின்றது என்று அதன் MD யானா யோகேஷ் தோரட் கூறியுள்ளார். MSP யை விட விலை அதிகமாக இருந்தால் APMC மண்டிகளுக்கு வெளியே உற்பத்திகளை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். MSP சந்தை விலையை விட அதிகமாக இருந்தால் APMC மண்டிகளுக்கே விற்பனை செய்கின்றனர்.

"FPC களுக்குப் பொருட்களை விற்பனை செய்தால் விவசாயிகள் உரிய நேரத்தில் பணத்தைப் பெறுகின்றனர். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் விவசாயிகள் தங்கள் உற்பத்திகளுக்குச் சரியான விலையைப் பெறுகின்றனர்," என்று தோரட் தெரிவித்தார்.

மண்டிகளுக்கு வெளியே தங்கள் பொருட்களை விற்பனை செய்ததால் மாநிலத்தில் MAHAFPC பத்து கோடிக்கு அதிகமாகச் சம்பாதித்து உள்ளது. மேலும் வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்றம் அமல்படுத்துவதிலிருந்து நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் மண்டிகளுக்கு வெளியே விற்பனை பொருட்களை விற்பனை செய்யவும் தடுக்கின்றது என்று FPC குற்றம்சாட்டியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News