Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி: 83 காவல்துறை காயமடைந்து வன்முறையில் முடிந்த டிராக்டர் பேரணி!

டெல்லி: 83 காவல்துறை காயமடைந்து வன்முறையில் முடிந்த டிராக்டர் பேரணி!

டெல்லி: 83 காவல்துறை காயமடைந்து வன்முறையில் முடிந்த டிராக்டர் பேரணி!

Saffron MomBy : Saffron Mom

  |  27 Jan 2021 10:30 AM GMT

நேற்று குடியரசு தின விழாவின் போது டிராக்டர் பேரணி தொடங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடக்கத்திலிருந்தே தங்கள் வன்முறையை வெளிப்படுத்தி வந்தனர்.

அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னேரே தங்கள் பேரணியை காவல்துறை தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய காலிஸ்தானியர்கள் 18 காவல்துறையைக் காயமடையச் செய்தனர் மற்றும் அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

மேலும் அந்த கட்டவிழ்த்து பட்ட வன்முறையில் 83 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இதுவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்த அழைப்பு விடுத்தனர்.

மேலும் அவர்கள் குடியரசு தின அணிவகுப்பு முடிந்தவுடன் பேரணி நடத்த டெல்லி காவல்துறை அனுமதி அளித்ததது. ஆனால் ஆர்பாட்டக்காரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பேரணி நடத்துவார்கள் என்று காவல்துறை நம்பி வந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உத்தரவை மீறினர்.

மேலும் குடியரசு தினத்தின் போது பல ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையை மோதிக் கொண்டும் மற்றும் அவர்களைத் தாக்கியும் டிராக்டர் பேரணி நடத்திய பல காட்சிகள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த ஆர்ப்பாட்ட கும்பலைத் தடுக்க முயன்ற காவல்துறையை அவர்கள் கற்கள், கத்திகள் உள்ளிட்டவற்றை எறிந்து தாக்குதல் நடத்தினர்.

மேலும் ஒரு வீடியோவில் காவல்துறை அந்த ஆர்ப்பாட்ட கும்பலைத் தடுக்க முயன்ற போது அதில் ஒருவன் துப்பாக்கியைப் பயன்படுத்துவதும் காணப்பட்டது. மேலும் இந்த ஆர்பாட்டக்காரார்கள் செங்கோடையிலும் சென்று தங்கள் வன்முறையை வெளிப்படுத்தி உள்ளனர்.

அந்த ஆர்பாட்டக்காரர்கள் செங்கோட்டையே அடைந்து பல மத மற்றும் உழவர் அமைப்புகளின் கொடிகளைப் பல இடங்களில் நட்டு வைத்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறையைக் கட்டுப்படுத்த டெல்லியில் இணையச் சேவையும் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. மேலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அதிரடிப் படைகளும் அங்குக் குவிந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News