Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி: FIR பதிவு செய்யாததால் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்!

டெல்லி: FIR பதிவு செய்யாததால் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்!

டெல்லி: FIR பதிவு செய்யாததால் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்!

Saffron MomBy : Saffron Mom

  |  26 Dec 2020 8:25 AM GMT

டெல்லி உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் டெல்லி காவல்துறையைப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாருக்கு FIR பதிவு செய்யாததால் சரமாரியாகக் குற்றம்சாட்டியுள்ளது. இந்து சிறுமியின் தந்தை தனது மகளை முஸ்லீம் இளைஞன் திட்டமிட்டுக் கடத்தி சென்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நீதிமன்றம் முன் சிறுமியைக் கொண்டுவர மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குக்கு FIR பதிவு செய்யப்பட்டவுடன் அதனைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு (AHTU) மாற்றவும் உத்தரவிட்டுள்ளது. நேரடி சட்டத்தின் படி, நவம்பர் 7 2020 இல் தனது மகளைக் கொண்டுவருவதற்காக நீதிமன்றத்தில் ஹேபியாஸ் கார்பஸ் மனுவைச் சமர்ப்பித்தார். தனது மகளை கடத்தியதாக சயீத் முஸ்தபா மீது குற்றம்சாட்டியிருந்தார். அவரது மனுவில் அவர் மகள் B-Tech படியிருப்பதாகவும் மற்றும் முஸ்தபா தொழிலாளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் மாநிலம், அவர் மகள் விரும்பி முஸ்தபாவை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளது. நிக்கா செய்ததை சமர்ப்பித்ததற்காக FIR பதிவு செய்யவில்லை என்று SHO நாராயணா தெரிவித்தார். இருப்பினும், நீதிமன்றம் நிக்கா செய்தற்கான ஆதாரங்களைக் கேட்டபொழுது, அதனைச் சரிபார்க்கவில்லை என்று காவல்துறை தெரிவித்ததது.

SHO யின் செயலற்ற தன்மைக்குக் கண்டனம் தெரிவித்து, "இந்த நிலைமை குறித்து நாங்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றோம், FIR பதிவு செய்யாமல் அந்த முஸ்தபாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டுகின்றது. இது முற்றிலும் SHO யின் செயலற்ற தன்மை காட்டுகின்றது," என்று நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் நீதிமன்றம் அந்த பெண் விருப்பமுடன் திருமணம் செய்துகொண்டார் என்பதை ஏற்க மறுக்கின்றது மற்றும் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் கேட்டுக்கொண்டது.

பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டு, "அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் மனுதாரர் அல்லது யாராலும் அச்சுறுத்தப்படாமல் இருக்க அடுத்த நான்கு நாட்களுக்கு நாரி நிகேதனில் வைக்கப்படுவார்," என்று கூறியது. மேலும் மனுதாரர் மற்றும் அவரது குடும்பம் அச்சுறுத்தப்படாமல் இருக்கப் பாதுகாப்பை வழங்குமாறும் நீதிமன்றம் SHOக்கு உத்தரவிட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News