Begin typing your search above and press return to search.
புதிய கல்விக் கொள்கை: கல்வித்துறை செயலாளருடன் மத்திய அமைச்சர் 17ம் தேதி ஆலோசனை.!
நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது பற்றி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வருகின்ற 17ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

By : Thangavelu
நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது பற்றி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வருகின்ற 17ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
தற்போது நாட்டில் பேராபத்தாக உள்ள சூழலில் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
மேலும், கல்விக்கொள்கையில் உயர் கல்வியில் முக்கிய அம்சங்களாக, 15 ஆண்டுகளில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முறை படிப்படியாக நீக்கப்பட வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Next Story