விரைவில் அமலுக்கு வரவுள்ள புதிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்!
விரைவில் அமலுக்கு வரவுள்ள புதிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்!
By : Saffron Mom
இந்தியாவில் விரைவில் தொழிலாளர்களுக்கான சீர் திருத்தத் திட்டங்கள் அமலுக்கு வர உள்ளன. ஊதியம், தொழில்துறை உறவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரத்துக்கான நான்கு சட்ட விதிகளை தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இந்த திருத்தச் சட்டங்கள் முன்னரே ஜனாதிபதி ராம் நாத் கோவிந் ஒப்புதலைப் பெற்றுள்ளது. மேலும் அமைச்சகம் விதிகளை அறிவித்த பின்னர் அமலுக்கு வரவுள்ளது.
"தொழிலாளர்களுக்கான நான்கு திருத்தச் சட்டத்தின் கீழ் வரவுள்ள விதிகள் இறுதி செய்யப்பட்டன. இந்த விதிகளை அறிவிக்கத் தயாராக உள்ளோம். மாநிலங்கள் நான்கு திருத்தச் சட்டத்தின் கீழ் விதிகளை உறுதி செய்வதற்கான பணியில் உள்ளன," தொழிலாளர் செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்தார்.
இந்த நான்கு தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களும் தற்போது மத்திய அமைச்சகத்தின் 44 தொழிலாளர்கள் சட்டங்களை உள்ளடக்கும் மற்றும் இந்த துறையில் தேவையான எளிய முறைகளையும் கொண்டுவரும். இந்த நான்கு தொழிலாளர் சீர் திருத்த சட்டங்கள் ஏப்ரல் 1 இல் இருந்து செயல்படுத்துவதற்கான பணிகளை அமைச்சகம் செய்து வருகின்றது.
மேலும் மே அல்லது ஜூன் மாதத்தில் முறைப்படி சேராத தொழிலாளர்களுக்கான ஒரு போர்டலை அமைக்க தொழில்துறை அமைச்சகம் உள்ளது. இது சுகாதாரம், வீட்டு வசதி, இன்சூரன்ஸ், திறன் மேம்பாடு மற்றும் உணவு போன்ற பகுதிகளில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டங்களை அமைக்க உதவுகின்றது. மேலும் இந்த போர்டல் கட்டிடம் மற்றும் கட்டிடத் தொழிலாளர்கள் குறித்த தகவல்களையும் சேர்த்துச் சேகரிக்கும்.