Kathir News
Begin typing your search above and press return to search.

75,000 ஊழியர்களை மாற்றம் செய்யும் மிகப் பெரிய சீர்திருத்தம் - எந்த நாட்டிடமும் கை ஏந்தாத நிலையை எட்டும் இந்திய பாதுகாப்புத்துறை!

New structure to transform Ordnance Factories into productive & profitable assets

75,000 ஊழியர்களை மாற்றம் செய்யும் மிகப் பெரிய சீர்திருத்தம் - எந்த நாட்டிடமும் கை ஏந்தாத நிலையை எட்டும் இந்திய பாதுகாப்புத்துறை!

MuruganandhamBy : Muruganandham

  |  16 Oct 2021 3:36 AM GMT

பாதுகாப்புத்துறையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கை, வெளிப்படைதன்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறையை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பில் தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த புதிய அணுகுமுறைக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு தளவாட வழித்தடங்களை உதாரணமாக கூறலாம். கடந்த 5 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 325 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆயுத தொழிற்சாலை வாரியத்தை மாற்றும் முடிவு குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், '' இது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு எனவும், தற்சார்பு இந்தியா இலக்கை அடைவதில், அரசின் தீர்மானத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது'' என்றார்.

ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் தற்போதைய முறையில் உள்ள பல குறைபாடுகளை போக்கவும், சந்தையில் போட்டியிடவும், ஏற்றுமதி உட்பட புதிய வாய்ப்புகளை ஆராயவும் புதிய அமைப்பு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதோடு தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என கூறினார்.

இந்த மறுசீரமைப்பின் நோக்கம், ஆயுதத் தொழிற்சாலைகளை ஆக்கப்பூர்வமாகவும், லாபகரமானச் சொத்தாகவும் மாற்றுவது; பொருட்கள் தயாரிப்பில் அதிக நிபுணத்துவத்தை ஏற்படுத்துவது; தரத்தை மேம்படுத்துவதுடன் போட்டியை அதிகரிப்பது மற்றும் செலவைக் குறைப்பது, பாதுகாப்பு தயார் நிலையில் தற்சார்பை உறுதி செய்வது என்றார்.

ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் அனைத்து ஊழியர்களும், புதிய பெருநிறுவனங்களுக்கு, 2 ஆண்டு கால சிறப்பு பணிக்கு மாற்றம் செய்யப்படுவர் எனவும், மத்திய அரசு ஊழியர்கள் என்ற நிலையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் கூறினார்.

பிரதமரின் தொலை நோக்கு மற்றும் தலைமையால் ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் மாற்றம் சாத்தியமானது.10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களில் உள்ள 41 தொழிற்சாலைகளில் பணியாற்றும் 75,000 ஊழியர்களை மாற்றம் செய்யும் மிகப் பெரிய சீர்திருத்தத்தை பாதுகாப்புத்துறை மேற்கொண்டுள்ளது.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News