உலக தரத்திற்கு ரயில் நிலையத்தை உயர்த்தும் மத்திய அரசின் மெகா திட்டம் - மத்திய அமைச்சர்!
200 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் சீரமைப்பு இன்று ரயில்வே துறை அமைச்சர் உறுதி.
By : Bharathi Latha
நேற்று மராட்டிய மாநிலத்தில் ரயில் பழுது பார்த்து தொழிற்சாலை காண அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ரயில்வே துறை மத்திய அமைச்சர் பங்கேற்று தொழிற் சாலைகளுக்கான அடிக்கல் நாட்டி பேசும் பொழுது அவர் கூறுகையில், இந்திய ரயில்வே துறை இந்திய ரயில்வே துறை மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் 200 ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான ஒரு மெகாத்திட்டத்தை மத்திய அரசு தயாரித்து உள்ளது.
ரயில் நிலையங்களின் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாழ்ந்த வசதிகள் இடம் பெறும். இதில் 32 ரயில் நிலையங்களில் பயணிகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், 47 ரயில் நிலையங்களுக்கான டெண்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. பிராந்திய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான தளமான ரயில் நிலையங்கள் செயல்படும்.
பிரதமர் கதி சக்தி திட்டத்தின் கீழ் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை மூலமாகவோ அல்லது ரயில் பாதை மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. மாற்று பகுதியும் கூட இணைக்கப்படும் அவுரங்காபாத்தில் நிறுவப்படும் ரயில் நிலைய பழுதுபார்க்கும் தொழிற்சாலை 18 பெட்டிகளை ஒரே நேரத்தில் பழுது பார்க்கும் வசதிகளை கொண்டிருக்கிறது. இதை 24 பெட்டிகளாக அதிகரிக்க கூறும் வேண்டுகோள் தற்போது பரிசீலனை உள்ளது. எதிர்காலம் நாட்டில் 400 வந்தே வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் நூறு ரயில்கள் மரத்துவாடாவில் லாத்தூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இதற்கு தேவையான மாற்றங்கள் அனைத்தும் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டன என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News