Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா, சீனா எல்லை பகுதியில் புதிய கிராமம் - இந்தியா விளக்கம்

இந்தியா, சீனா எல்லை பகுதியில் புதிய சீனா புதிய கிராமத்தை அமைத்துள்ளதற்கு இந்தியா சார்பாக இந்திய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா எல்லை பகுதியில் புதிய கிராமம் - இந்தியா விளக்கம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 July 2022 7:28 AM IST

இந்தியா, சீனா எல்லை பகுதியில் புதிய சீனா புதிய கிராமத்தை அமைத்துள்ளதற்கு இந்தியா சார்பாக இந்திய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சீனா, இந்தியா பூட்டான் எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் சீனாவும் இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட சீன ராணுவ வீரர்களளை நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினார்.

இந்த நிலையில் டோக்லாம் அருகே 9 கிலோமீட்டர் தொலைவில் பூட்டானுக்கு சொந்தமான பகுதியில் கிராமங்களை அமைக்கும் பணியில் சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது. செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக இது கடந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது. பாங்டா என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த கிராமத்தில் மக்கள் தற்பொழுது குடியேறி உள்ளனர் என செயற்கைக்கோள் புகைப்படம் தெளிவாக காட்டுகிறது.

இதுகுறித்து நாம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது, 'நம் அரசு அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, அங்கு நடந்து வரும் அனைத்து முன்னேற்றங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்! நம் நாட்டின் எல்லை மற்றும் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' இவ்வாறு அவர் கூறினார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News