Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை அச்சுறுத்தும் கரும்பூஞ்சை: ட்விட்டரில் டிரெண்டிங்.!

கொரோனா வைரஸ் தொற்றை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், தற்போது கரும்பூஞ்சை நோய் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கியுள்ளது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவை அச்சுறுத்தும் கரும்பூஞ்சை: ட்விட்டரில் டிரெண்டிங்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 May 2021 5:36 PM IST

கொரோனா வைரஸ் தொற்றை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், தற்போது கரும்பூஞ்சை நோய் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கியுள்ளது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை முடிந்தது. இதனால் மக்கள் அனைவரும் பெரும் நிம்மதி அடைந்திருந்த நிலையில், கொரோனா தொற்றின் 2வது அலை மனிதர்களை மீண்டும் தாக்க தொடங்கியது.





இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முழுவதும் முடங்கிய நிலையில் உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது கரும்பூஞ்சை நோய் மனிதர்களை தாக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கரை கரும்பூஞ்சை நோய் தாக்க தொடங்கியுள்ளது.





உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்த நோய் தாக்கும் என கூறப்படுகிறது. இதன் அறிகுறி கண் சிவப்பது, நீர் வடிவது, மற்றும் கண் விழிகள் வெளியில் தள்ளிக்கொண்டே இருப்பது, கண் அசைவு குறைதல், கண்களை சுற்றிலும் கருமை, மூக்கில் வடியும் கருப்பு திரவம் மற்றும் தலைவலி இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

இந்நிலையில், கரும்பூஞ்சை குறித்து ட்விட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. #BlackFungus என்ற பெயரில் டிரெண்டிங் செய்யப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News