Begin typing your search above and press return to search.
கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை.. முதலமைச்சர் எடியூரப்பா.!
கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை.. முதலமைச்சர் எடியூரப்பா.!

By : Kathir Webdesk
தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்று முதல் ஜனவரி 2ம் தேதிவரை கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கும் முதலமைச்சர் நாராயணசாமியின் முடிவுக்கு அம்மாநில் துணை நிலை ஆளுநர் கிரெண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
