கசிந்த ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு! கிடுகிடுத்துபோய் போன எதிர்கட்சிகள்!
By : Sushmitha
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கமிட்டியின் முதல் கூட்டம் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நடைமுறைகளில் உள்ள சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைத்தது. அதன்படி சமீபத்தில் இந்த குழுவின் முக்கிய அதிகாரிகள் நடத்திய ஆலோசனையின் முடிவில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி அன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம் நடைபெறுகிறது என முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி, வருகின்ற 18ஆம் தேதி பார்லிமென்ட் கூடுகிறது அதில் என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது! ஐயா மோடி அவர்களுக்கு தான் தெரியும் அந்த அளவிற்கு எல்லா மாநில முதலமைச்சர்களும் பயந்து உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே தேர்தல் வரும்! எதிர்பார்க்கின்றோம் தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கும் ஊழல் ஆட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை அகற்றுவதற்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என்றும் கூறியுள்ளார்.