அதிக செல்வாக்கை பெற்ற உலகின் முதல் தலைவர் பாரத பிரதமர் மோடி
By : Sushmitha
உலக தலைவர்களில் அதிக செல்வாக்கை பெற்ற தலைவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி! குவியும் பாராட்டுகள்.
மார்னிங் கன்சல்ட் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம். இந்த நிறுவனம் உலக தலைவர்களுக்கு உள்ள செல்வாக்கை பற்றி ஆய்வு நடத்தியுள்ளது இந்த ஆய்வின் இறுதியில் உலக அளவில் அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக 76 சதவீதம் ஆதரவை பெற்று முதலிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு, ஜி 20 மாநாட்டிற்கு பின் உலக அளவில் அதிக செல்வாக்கை பெற்ற தலைவராக பாரதப் பிரதமர் மோடி திகழ்கிறார் என்று பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலுனி தனது ட்விட்டர் பதிவிலும், பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அளவில் நம்பிக்கை மற்றும் தலைமையில் இணையற்ற அடையாளமாக விளங்குகிறார் என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவும் அறிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வின் படி இரண்டாவது இடத்தில் ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஏழாவது இடத்தில் 40% ஆதரவை பெற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source - Dinamalar