விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மோடி அரசு.. ஏன் தெரியுமா..

பிரதமர் நரேந்திர மோடி தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை அதிகரித்ததன் மூலம் சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்தினார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமது தொலைநோக்குப் பார்வையாலும், விண்வெளி ஆராய்ச்சிக்கான ஒதுக்கீட்டை அதிகரித்ததன் மூலமும் சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்தினார் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
சந்திரயான் -3 வெற்றிகரமாக மென்மையாகத் தரையிறங்கியதன் மூலம் முத்திரையிடப்பட்ட இந்தியாவின் மகத்தான விண்வெளி பயணம் குறித்து மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார். "தேவைப்படும் போது நாங்கள் அவர்களுக்கு நிதி வழங்கியுள்ளோம், தேவைப்படும் போது நாங்கள் அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம், தேவைப்படும்போது நாங்கள் அவர்களுக்கு ஒருங்கிணைப்பை வழங்கியுள்ளோம், திணிக்கப்பட்ட தளைகளிலிருந்து நாங்கள் அவர்களை விடுவித்துள்ளோம், இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடந்துள்ளது" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பிரதமர் மோடி விண்வெளி பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பன்மடங்கு உயர்த்தினார். விண்வெளித் துறையைத் தனியாருக்குத் திறந்தார். இதன் விளைவாக 2014 ஆம் ஆண்டில் வெறும் 4 ஆக இருந்த விண்வெளி ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை இப்போது 150 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
"விண்வெளி பட்ஜெட்டை மட்டும் பார்த்தால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 142% அதிகரிப்பு உள்ளது" என்று கூறிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை போன்ற தொடர்புடைய வரவுசெலவுத் திட்டங்களில் மூன்று மடங்கு அல்லது அதற்கும் கூடுதலான அதிகரிப்பு இருப்பதை சுட்டிக்காட்டினார். 1990 களில் இருந்து இஸ்ரோவால் செலுத்தப்பட்ட 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில், 90% க்கும் அதிகமானவை - 389 கடந்த ஒன்பது ஆண்டுகளில் செலுத்தப்பட்டன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Input & Image courtesy: News