நாளை காலை ஸ்லீப் மோடில்லிருந்து விழித்தெழுகிறதா விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்!
By : Sushmitha
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் மூன்றில் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது. அதன்படி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடு என்றும் நிலவின் தென்முனையில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. தரை இறங்கிய விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்தது. இருப்பினும் நிலவில் பகல் பொழுது முடிந்ததால் லேண்டரும், ரோவரும் ஸ்லீப் மோடிற்கு மாற்றப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் நிலவில் ஒரு இரவு பொழுது என்பது பூமியின் 14 நாட்களைக் கொண்டதாகும். அந்த வகையில் நிலவில் பகல் பொழுது நாளை செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. நிலவில் பகல் நேரம் ஆரம்பிக்கப்பட்ட உடன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சூரிய சக்தியால் மின் ஆற்றலை பெற்று இயங்கும் என்று ஸ்லீப் மோடில்லிருந்து விழிதெல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நிலவின் தென் துருவத்தில் இரவு நேரம் என்பது 200 டிகிரி செல்சியஸ் இருப்பதாகவும் அதனைத் தாங்கும் அளவிற்கு சந்திரயான் 3 உருவாக்கப்படவில்லை என்றும், ஸ்லீப் மோடில் இருக்கும் லேண்டர் மற்றும் ரோவர் சார்ஜ் செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் விழித்தெழுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளால் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source - The Hindu