தெலுங்கானா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி!
By : Sushmitha
வருகின்ற 30ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஏற்பாடு செய்திருக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
நடப்பாண்டின் இறுதியில் தெலுங்கானா மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் கிளம்பி அதற்காக பாரத் ராஷ்ட்ரிய சமிதி, பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனது தேர்தல் களப்பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 30ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் பாஜக பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள தாகவும், பிரதமர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்க கூடும் எனவும் நம்பிக்கை வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி மற்றும் மற்ற கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக மாநில பாஜக பொதுச்செயலாளர் பிரேமேந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கானாவிற்கு தேர்தல் ஆணையம் விரைவில் வந்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.