தூய்மையான இந்தியாவை உருவாக்க இதில் இணையுங்கள்.. பிரதமரின் அன்பான அழைப்பு..
By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஒரு அழைப்பை விடுத்து இருக்கிறார். எப்படி சுதந்திர தினத்தின் போது ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வீட்டின் பகுதியில் இந்திய தேசிய கொடியை வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினோமோ? அதை போல் தற்போது காந்திஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியாவிற்கான ஒரு நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் எடுத்து இருக்கிறது. அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி ஒரு நாள் ஒரு மணி நேரம் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து நாம் நம்முடைய சுற்றுப்பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வது தான் அது.
அக்டோபர் 1, 2023 அன்று ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பங்களிப்பில் இணையுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மை முயற்சியான ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பங்களிப்பில் இணையுமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நகர்பகுதி தூய்மை என்ற தலைப்பில் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து பிரதமர் மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்.
“அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஒரு முக்கிய தூய்மை முயற்சிக்காக நாங்கள் ஒன்று கூடுகிறோம். தூய்மை இந்தியா என்பது பகிர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பாகும், மேலும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்.” என்று பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.
Input & Image courtesy: News