தூய்மை இந்தியா இயக்கத்தில் ஜம்மு காஷ்மீர் சாதனை... பிரதமர் பாராட்டு...
By : Bharathi Latha
இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா இயக்கத்திற்காக மிகப்பெரிய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மாநில அரசுகள் மத்திய அரசு இணைந்து தூய்மை இந்தியா திட்டத்திற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தற்பொழுது தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நூறு சதவீதம் திறந்தவெளியில் மலம் இல்லாத மாநிலத்தை உருவாக்கி இருப்பதாகவும் அதற்காக தன்னுடைய பாராட்டுகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாநில அரசு சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறது.
இந்த கருத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய பதிலை அளித்திருக்கிறார். அது மட்டும் கிடையாது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கிறார். ஏனென்றால் 100% திறந்த வெளி மலம் இல்லாத மாநிலத்தில் உருவாக்குவதற்காகவும் மக்களின் ஒத்துழைப்பிற்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து இருக்கிறார்.
இரண்டாம் கட்ட கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ‘மாதிரி’ பிரிவில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசக் கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை 100% அடைந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருப்பதாவது, “பாராட்டுக்குரிய முயற்சியை மேற்கொண்டதற்காக ஜம்மு-காஷ்மீர் மக்களை நான் பாராட்டுகிறேன். தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மகத்தான செயல்பாடாகும்" என்று கூறினார்.
Input & Image courtesy: News