கற்கள், கம்பிகளால் வந்தே பாரத்திற்கு போடப்பட்ட சதி! போலீஸ் விசாரணை!
By : Sushmitha
வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க போடப்பட்ட சதியா என போலீசார் விசாரணை
ராஜஸ்தானில் உதய்பூர் - ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஒன்பது வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி துவக்கி வைத்தார். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி ஒன்று நடைபெற்றுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது உதய்ப்பூர் - ஜெய்ப்பூர் இடையிலான வந்தே பாரத் ரயிலில் வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் கற்கள், இரும்புகள், கம்பிகள் போன்றவை இருந்ததை கவனித்த அந்த வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் டிரைவர் வந்தே பாரத் ரயிலை நிறுத்தி தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தக்க நேரத்தில் சென்றடைந்ததால் வந்தே பாரத் ரயில் செல்ல இருந்த பகுதியில் செல்லாமல் விபத்தில் இருந்து தப்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் ஏதேனும் உள்நோக்கத்தோடு தான் கற்கள் இரும்புகள் கம்பிகள் போன்றவை போடப்பட்டுள்ளதா? வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க நடத்தப்பட்ட சரியா? என்று கோணத்திலும் போலீசார் வழக்குகளை பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வந்தே பாரத் ரயில் செல்லும் தண்டவாளத்தில் போடப்பட்டிருந்த அனைத்தையும் அகற்றும் வேலையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Source - Dinamalar