அண்ணாமலையின் உடல்நலம் குறித்து பிரதமர் கட்டிய அக்கறை!
By : Sushmitha
டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் என் மண் என் மக்கள் நடைபயணம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அண்ணாமலையின் உடல்நிலை குறித்து அவரிடம் தொலைபேசியில் விசாரித்துள்ளார்.
அதாவது இன்று காலை அண்ணாமலையுடன் பிரதமர் தொலைபேசியில் உடல் நலம் குறித்து கேட்டுள்ளார் அதற்கு அண்ணாமலையும் தொண்டை வலி என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு உடனடியாக பிரதமர், "நீங்கள் டெல்லி வந்து என் நேரடி மேற்பார்வையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற வேண்டும் அது என்னுடைய பொறுப்பு உங்கள் உடல்நிலை எனக்கு முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வலியுறுத்தலுக்கு அண்ணாமலை ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் அதற்கும் சரி என்று தொலைபேசி வைத்துவிட்டு அரை மணி நேரம் கழித்து மறுபடியும் அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைத்து நீங்கள் டெல்லிக்கு வர வேண்டும் ஆயுர்வேத சிகிச்சைக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்காக அண்ணாமலை பிரதமரிடம் நன்றி தெரிவித்த நிலையில் உடலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவலை மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதை உங்களிடம் நான் தெரிவிப்பதற்கு காரணம் பிரதமர் மோடி என்பவர் அதிக வேலை பளு கொண்ட பிசியான சூழலில் இருப்பவர் அந்த நிலையிலும் தனது தொண்டர்கள் மீது அவர் அதிக அக்கறை காட்டுகிறார் இதுவே பாஜகவின் பலம் என்று தனது கட்சியினரிடம் அண்ணாமலை கூறியுள்ளார்.
Source - Dinamalar