Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியர்களுக்கு இலவச விசா - இலங்கை அரசு அறிவிப்பு

இந்தியர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு இலவச விசா - இலங்கை அரசு அறிவிப்பு

KarthigaBy : Karthiga

  |  25 Oct 2023 1:45 PM GMT

தீவு நாடான இலங்கை சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டு தோறும் உலகின் பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்தனர். ஆனால் இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தின தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக சரிந்தது.


அதோடு கடந்து ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான அரசு எதிர்ப்பு போராட்டங்கள் போன்றவற்றால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் குறைந்தது. இலங்கை அரசு தனது நாட்டின் பெருமளவு வருவாயை சுற்றுலாத்துறை நம்பியே இருக்கிறது. எனவே சுற்றுலா துறையை வலுப்படுத்த அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.


இந்தியா, சீனா , ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இலவச வழங்குவதற்கு இலங்கை மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அலி சப்ரி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மேற்கூறிய ஏழு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இலவச நுழைவுக்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் போது கட்டணம் இன்றி விசாவை பெற முடியும் என கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News