சத்தீஸ்கரை முழுவதுமாக கொள்ளை அடித்த காங்கிரஸ்! பிரதமர் குற்றச்சாட்டு!
By : Sushmitha
சாராயம், சிமெண்ட், அரிசி என அனைத்திலும் சத்தீஸ்கர் முழுவதும் காங்கிரஸ் கொள்ளை அடித்து விட்டது!
வருகின்ற 7 மற்றும் 17ஆம் தேதி அன்று சத்தீஸ்கரின் இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார். இதற்கு முன்பாக சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் செய்யும் சில வாக்குறுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை பாஜக அரசு கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் சத்தீஸ்கரில் சாராயம், சிமெண்ட், அரிசி என அனைத்திலும் காங்கிரஸ் கொள்ளை அடித்து மக்கள் பணத்தை சுரண்டிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி சூதாட்டக்காரர்கள் மூலம் மக்களின் பணத்தை கொள்ளையடித்து தங்களது வீடுகளில் காங்கிரஸ் தலைவர்கள் நிரப்பி வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் ராய்ப்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு பெரிய அதிரடி நடவடிக்கையில் பெருமளவிலான பணம் குவியல்களாக சிக்கியதாகவும் கூறினார்.
Source : Daily Thanthi