பெண்களை மதிக்காத தலைவர்கள் தான் நாட்டிற்கு நல்லது செய்வார்களா? பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலை ஆவேசம்!
By : Sushmitha
பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள் தொகையின் கட்டுப்பாட்டு பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் பேசும் பொழுது சில விஷயங்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபொழுது அண்ணாமலை, அவர் பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மூத்த தலைவரான நிதிஷ் குமார் எங்கள் தாய் மற்றும் சகோதரியை குறித்து மிகவும் ஆபாசமாக பேசி உள்ளார். மேலும் இவர் திமுகவினரை போல் பேசுகிறார். பொதுவாக திமுகவினர் தான் இதுபோன்று அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள் என்று தனது கண்டனத்தை முன் வைத்தார்.
அதோடு மத்திய பிரதேசத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இண்டி கூட்டணியில் மிகப்பெரும் தலைவராக இருக்கும் ஒருவர் பெண்களைக் குறித்து ஆபாசமாக மிகவும் மோசமாக பேசியவரை இண்டி கூட்டணி சேர்ந்த மற்ற தலைவர்களில் ஓருவர் கூட கண்டிக்கவில்லை! பெண்களைக் குறித்து இப்படி தரக்குறைவாக பேசும் சிந்தனை கொண்டவர்கள் நாட்டிற்கு நன்மை செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்வியையும் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார்.
Source : Dinamalar & Junior Vikatan