யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள மலேசியா செய்யும் முயற்சி! வளரும் இந்திய ரூபே பரிவர்த்தனை!
By : Sushmitha
2016 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட யுபிஐ கட்டமைப்பு தற்போது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டி கடைகள் வரையிலான பணம் செலுத்தும் பிரதான பரிவர்த்தனையாக மாறி உள்ளது. மேலும் இந்தியா யுபிஐ பணப்பரிவர்த்தனையை இரு நாடுகளுக்கு இடையேயான பண பரிவர்த்தனை கட்டமைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதுமட்டுமின்றி டாலருக்கு பதிலாக வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ரூபாயை பயன்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மலேசியா மத்திய அரசு செய்து வருகிறது. அதில் மற்ற முக்கியமான நாடுகள் டாலருக்கு நிகராக ரூபாயையும் தற்போது பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் யுபிஐ மற்றும் ரூபே பரிவர்த்தனை சேவையை ஏற்றுக்கொள்ளும் வகையிலான தங்கள் பரிவர்த்தனை கட்டமைப்பை மலேசியா அரசு மாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதுகுறித்து மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சாம்ப்ரி அப்துல் காதிர், இந்தியாவின் யு பி ஐ பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் மலேசியா மத்திய வங்கி மேற்கொண்டு வருகிறது. மேலும் ரூபே பரிவர்த்தனையையும் மலேசியா ஏற்றுக்கொள்ள உள்ளதாகவும் இந்த பரிவர்த்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கான தொழில் நுட்ப கட்டமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை தற்போது மலேசியா செய்கிறது. இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த ஏற்றுமதி - இறக்குமதி பரிவர்த்தனைகளையும் இந்தியாவின் உள்நாட்டுக் காரன்சியிலேயே செய்யும் முயற்சியிலும் நாங்கள் இறங்கி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Source : The Hindu Tamilthisai