செயலில் ஜீரோ, ஆனால் பெயரில் ஹீரோ என புகழ்ந்து கொள்கிறார்கள்.. மத்திய அமைச்சர் தாக்கு..
By : Bharathi Latha
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி செயல்பாடுகள் ஜீரோவாக இருப்பதாகவும், ஆனாலும் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தன்னை ஹீரோ என்று அழைத்துக் கொள்வதாகவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியிருக்கிறார். சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு கடந்த ஏழாம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகின்ற 14ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறுதி கட்ட பிரச்சாரங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அங்குள்ள சீதாப்பூரில் பாஜக சார்பில் நேற்று நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவரும் மற்றும் மத்திய அமைச்சர் அவர்கள் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் மாநில காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். குறிப்பாக இந்த அரசியல் செயல்பாட்டு அறிக்கைகளை மக்கள் கேட்டால் அது தீர்வாக தான் இருக்கிறது. சிறந்த நிர்வாகம் வளர்ச்சிப் பணிகளில் அவர்கள் வெறும் பூஜ்ஜியம் தான். ஆனாலும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களை தாங்களே ஹீரோகளாக சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோ. தேர்தல் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது . சத்தீஸ்கரில் கடந்த பாஜக ஆட்சியின் போது இடதுசாரி பயங்கரவாதம் மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் இருந்தது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் அது கடுமையாக வளர்ந்து இருக்கிறது. இங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் இடதுசாரி பயங்கரவாதம் மூன்றும் மற்றும் நான்கு ஆண்டுகளுக்குள் ஒழிக்கப்பட்டு விடும். சத்தீஸ்கரில் கட்டாயம் அதை மாற்றும் அதிகரித்து விட்டது, இது ஒரு கவலைக்குரிய அம்சம் யாரையும் கட்டாயமாக ஏன் மதமாற்ற வேண்டும்? பாஜக ஆட்சிக்கு வந்தால் இது போன்ற மத மாற்றத்திற்கு தடைவிதிப்போம் என்று மத்திய அமைச்சர் பேசியிருக்கிறார்.
Input & Image courtesy: News