Kathir News
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் இருக்கும் சீன போர்க்கப்பல்.. இந்திய கடற்படை எடுத்த நடவடிக்கை..

பாகிஸ்தானில் இருக்கும் சீன போர்க்கப்பல்.. இந்திய கடற்படை எடுத்த நடவடிக்கை..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Nov 2023 3:08 AM GMT

பாகிஸ்தான் உடன் தற்போது பயிற்சியில் சீன போர்க்கப்பல் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக சீன போர்க்கப்பல் இதற்காக பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து இருப்பதாகவும் இதன் காரணமாக அந்த போர்க்கப்பலின் நடவடிக்கையை இந்திய கடற்படையினர் தொடர்ச்சியான வகையில் கண்காணித்து வருகிறார்கள். இந்திய பெருங்கடலில் சீன கடற்படை மற்றும் பாகிஸ்தான் கடற்படை இரண்டும் கூட்டாக இணைந்து பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. இதற்கு கடல் பாதுகாவலன் என்று பெயர் இடப்பட்டு இருக்கிறது.


இந்த பயிற்சிக்கு சீன கடற்படை தனது முன்னணி போர்க்கப்பல் மற்றும் ஒரு நீர்மூழ்கி கவலை பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் பயிற்சி நடைபெற இருப்பதால் அதில் சீன போர்க்கப்பல் பங்கேற்று இருப்பதாகும் இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உளவுத்துறையில் இருந்து தகவல்கள் வழியாக இருக்கிறது.


அதன் காரணமாக அதக்கிய பகிர்ஷுக்கு பள்ளியில் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் மத்திய அரசு தரப்பில் ஒரு நடவடிக்கை எடுக்க பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி சீன கப்பல் மலக்கா நீர் இணைப்பு வழியாக இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தவுடன் இந்திய கடற்படை தனது கண்காணிப்பை தொடங்கிவிட்டது. தேச பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு இந்தியப் பெருங்கடல் பகுதியில் எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று அதிகார பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News