"முதல்முறையாக ஜி.டி.பி.' யில் இந்தியா புதிய சாதனை"!
By : Sushmitha
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவைப் பொருத்த தான் ஒரு அந்நாட்டின் ஜி.டி.பி. எனப்படும் பொருளாதார நிலையை குறிப்பிட முடியும். அந்த வகையில் நம் நாட்டின் பொருளாதாரத்தை வருகின்ற 2026 முதல் 2027 வரை 5 ட்ரில்லியன் டாலராக அதாவது 416 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. இதற்காக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு பல சிறப்பான வேலைகளையும் புதுமைகளையும் முயற்சித்தும் செயலாற்றியும் வருகிறது.
அதன் பலனாக தற்போது நம் நாடு உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் பாஜக அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவை மூன்றாவது இடத்திற்கு முன்னேற வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்து அதற்கான செயல்பாடுகளில் தற்போது இறங்கி உள்ளது.
அந்த செயல்பாடுகளின் பலன்கள் இந்தியாவிற்கு கிடைக்கிறது என்பதை வெளிக்காட்டும் வகையில் முதல் முறையாக நம் நாட்டின் ஜி.டி.பி. நான்கு ட்ரில்லியன் டாலர் அதாவது 333 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த தகவலை பாஜகவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
Source : Dinamalar