Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகரித்து வரும் பெண் முதலீட்டாளர்கள்!! இனி இந்தத் துறையிலும் வளர்ச்சி நிச்சயம்!!

அதிகரித்து வரும் பெண் முதலீட்டாளர்கள்!! இனி இந்தத் துறையிலும் வளர்ச்சி நிச்சயம்!!
X

G PradeepBy : G Pradeep

  |  4 Sept 2025 4:57 PM IST

பெண்கள் என்றாலே அதிக அளவில் நகை போன்றவற்றிற்கு ஆசைப்படுவார்கள். பெரும்பாலும் பெண்கள் சேமித்து வைக்கும் பணம் எல்லாம் எங்கே போகிறது என்று பார்த்தால் அது ஒன்று தங்கமாக இருக்கும் அல்லது வேறேதும் பொருளாக வாங்கி வைப்பார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது அதிகப்படியான பெண்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் அதிக அளவில் ஈடுபாடு கொண்டு வருகின்றன. பெண்களுக்கு பெரும்பாலும் சேமிப்பு என்பது பழக்கமாக இருக்கும் இந்த நிலையில் தற்பொழுது அதிகப்படியான பெண்கள் முதலீடு போன்ற விஷயங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனை பார்க்கும் பொழுது நாட்டின் நிதி நிலையை மாற்றி அமைப்பதில் பெண்கள் தங்களுடைய ஈடுபாடை செலுத்துவதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் பெண் முதலீட்டாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் டிஜிட்டல் வெல்த் என்ற முதலீட்டு தளமான பின்​எட்ஜ் மேற்கொண்ட ஆய்வின்படி கடந்த 2012 ஆம் ஆண்டில் 18% இருந்த பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தற்பொழுது 42% அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண் முதலிட்டாலர்கள் 50% அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News