Kathir News
Begin typing your search above and press return to search.

பிராமணர்களை நோக்கி அமெரிக்கா முன்னாள் ஆலோசகர் கூறிய கருத்து!! இந்தியாவின் மறுப்பு!!

பிராமணர்களை நோக்கி அமெரிக்கா முன்னாள் ஆலோசகர் கூறிய கருத்து!! இந்தியாவின் மறுப்பு!!
X

G PradeepBy : G Pradeep

  |  6 Sept 2025 6:03 PM IST

அமெரிக்க நாட்டின் முன்னாள் வர்த்தக ஆலோசகராக இருந்த பீட்டர் நவரோ இந்தியா குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மூலமாக இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் தான் அதிக அளவில் பயன் அடைகிறார்கள் என்ற கருத்து முன் வைத்துள்ளார்.

இந்த நிலையில் பீட்டர் நவரோ கூறிய கருத்து முற்றிலும் தவறானது. இந்தக் கருத்தை இந்தியா மறுக்கிறது என்று வெளியுறவுத்துறை நிதி தொடர்பாளரான ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

ஏற்கனவே அமெரிக்காவின் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தில் அளித்த பேட்டியில் புடின் மோடிக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் அழிப்பதாகவும், இதனை இந்தியா வாங்கி சுத்திகரிப்பு செய்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் உள்ள பல நாடுகளுக்கு திருமதி செய்து லாபமடைகிறது இன்றும் இந்திய மக்கள் இது குறித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும் இதனால் பிராமணர்கள் தான் பயனடைகின்றனர் என தெரிவித்திருந்தார்.

இதனால் உக்ரைன் மீதான ரஷ்யா தொடுக்கும் போருக்கு நிதி உதவி இந்தியாவிடம் இருந்து கிடைப்பதாகவும், அதனால் அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது என கூறியிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News