பயங்கரவாதிகளின் சதித்திட்டத்திற்கு எதிராக இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் என் ஐ ஏ சோதனை!!

By : G Pradeep
இந்தியாவின் உளவுத்துறையின் மூலம் கிடைத்த தகவல்களின்படி பயங்கரவாதிகளை தேடி பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது,இதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடந்து வரும் RC-1/2025/NIA/CHE பதிவு செய்யப்பட்ட வழக்கை என் ஐ ஏ விசாரித்து வருகிறது .
இந்த வழக்கில் கலவரத்தை தூண்டுதல் சட்ட ஒழுங்கை சீர்குலைத்தல் மற்றும் தேச விரோதத்திற்கான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள், இவர்களின் பற்றிய வழக்குகளை தீவிரமாக விசாரித்து வருகிறது.
இதை தொடர்ந்து என் ஐ ஏ இந்தியாவில் ஐந்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசத்திலும் ,இந்த மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 9 இடங்களிலும் ,பீகாரில் எட்டு இடங்களிலும், உத்தரபிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தல ஒரு இடங்களிலும் , ஒரே நேரத்தில் அந்தந்த மாநிலங்களில் காவலர்களின் உதவிகளுடன் , சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் என் ஐ ஏ தீவிர சோதனை நடத்தியது.
இதனை அடிப்படையாகக் கொண்டு என் ஐ ஏ பல மாநிலங்களிலும் அதன் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் சந்தேகத்திற்கு உண்டான நபர்களை கைது செய்து கொண்டிருக்கிறது .
