சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணத்தில் செய்த காரியம்!! தமிழக மக்கள் மகிழ்ச்சி!!

By : G Pradeep
இந்தியாவின் 15 ஆவது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது மிகவும் பெருமை படக்கூடிய ஒன்றாக உள்ளது.
பதவி பிரமாதத்தில் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு பதவிப்பிரமாண பத்திரத்தை வாசிக்க அதன்படி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்னும் நான்... என தான் பிறந்த கிராமத்தில் பெயரை சபையில் உச்சரித்து பதவியேற்று கொண்டது தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய ஒன்றாகவும் மகிழ்ச்சியான ஒன்றாகவும் உள்ளது.
இவர் திருப்பூர் மாவட்டத்தில் சந்திராபுரம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய 16 வயதிலேயே ஆர் எஸ் எஸ் மற்றும் பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்து அரசியலில் அடி எடுத்து வைத்தார். இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை பாஜகவின் மாநில தலைவராகவும் இருந்து வந்தார்.
அதன் பின் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் என தொடர்ச்சியாக பல பதவிகளில் தன்னுடைய பங்கினை ஆற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு வகித்த ஜகதீப் தன்கருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தலில் 452 வாக்குகள் பெற்றுசி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று குடியரசு துணைத் தலைவராக பதவியேற்று பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறார்.
