சிபிஆர் ராதா கிருஷ்ணனின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட தன்கர்!! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!!

By : G Pradeep
முன்னாள் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தன்னுடைய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை திடீரென்று இராஜினமா செய்தார். இதனைத் தொடர்ந்து எதற்காக அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்று பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர். அவருடைய பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில் அதற்குள் ஏன் ராஜினாமா செய்தார் என கேட்டனர்.
இந்நிலையில் அவர் தன்னுடைய உடல்நல குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தாலும் கூட எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் இதில் பாஜகவின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டி வந்தது. மேலும் தன்னுடைய ராஜினாமாவிற்கு பிறகு எந்த ஒரு பொது நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்த தங்கர் சிபிஆரின் துணை குடியரசு தலைவராக பதவியேற்ற விழாவில் மட்டும் கலந்து கொண்டது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பெற்று வந்தது.
நீண்ட நாட்களாக எதிலும் கலந்து கொள்ளாமல் காணாமல் போய்விட்டாரா என்று தேடும் அளவு இருக்கு இருந்த இவருடைய நிலை தற்பொழுது இந்த விழாவில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் தன்கர் கலந்து கொண்டது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் முற்றுப்புள்ளி வைத்தது போல இருந்தது.
