இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு புதிய திட்டம்!!இனி கவலையே இல்லை!!

By : G Pradeep
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களுக்கும் வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கும் குடியேற்ற ஒப்புதல் என்பது மிகவும் முக்கியமானது. அதனை பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் வெகு நேரமாக வரிசையில் காத்திருந்து பெறவேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் மிக விரைவில் குடியேற்ற ஒப்புதல் வழங்கும் வகையில் ஃபாஸ்ட் ட்ராக் இமிக்ரேஷன் ட்ரஸ்டட் டிராவலர் திட்டம் (எப்டிஐ -டிடிபி) தற்பொழுது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு டெல்லியில் அமைந்திருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் முதற்கொண்டு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வரை கவுன்டரில் காத்திருக்காமல் நுழைவு வாயிலாக மிக விரைவில் குடியிருப்பு ஒப்புதலை வாங்க முடியும்.
மேலும் இந்த வசதியை பெறுவதற்கு www.ftittp.mha.gov.in என்ற பயோமெட்ரிக் தகவல்களை உள்ளிட்டு விண்ணப்பித்த பிறகு பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே மும்பை சென்னை கொல்கத்தா உட்பட ஆறு இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்தத் திட்டத்தை அமித்ஷா லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு மற்றும் அமிர்தசரஸ் போன்ற விமான நிலையங்களிலும் தொடங்கி வைத்துள்ளார்.
இதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் மிக எளிதில் குடியேற்ற ஒப்புதல் பெற முடியும் என்று அமித்ஷா கூறினார். மேலும் இத்திட்டத்தின் மூலம் ஒரு முறை விண்ணப்பித்தால் அது ஐந்து ஆண்டு வரை பயன்படுத்தலாம் எனவும், பாஸ்போர்ட் காலாவதி ஆகும் முன்பு பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்பொழுது இந்தியாவில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
