உங்களுக்கு தெரியுமா...ஞானபாரத திட்டம் பற்றி??

By : G Pradeep
கையெழுத்து பிரதிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காகவும் அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்காகவும் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக ஞானபாரதம் என்கின்ற பெயரில் டிஜிட்டல் தளத்தை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 12 ஞானபாரதம் இன்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஞானபாரத சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கையெழுத்து பிரதி பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டி இந்த தளத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசும் பொழுது இந்தியாவில் கையெழுத்து பிரதி என்பது சேகரித்து வைத்துள்ள நாகரீக பொக்கிஷம் என்றும், இது இந்தியாவின் அறிவு மரபு, புதுமை சேர்த்தல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை கொண்டவையாக உள்ளது.
இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகவும், நவீன கலாச்சாரத்தில் பல தேசங்கள் கூறும் செய்திகளை தாண்டியும் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 80 மொழிகளில் பண்டைய காலத்து பிரதிகள் இருப்பதாகவும், இது வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று மோடி கூறினார்.
கணிதம் முதல் கணினி வரை நவீன காலத்தில் இருக்கும் அனைத்திற்கும் இது போன்ற பங்களிப்புகள் எப்போதும் இருக்கும் என குறிப்பிட்டார். இதுபோன்ற கையெழுத்து பிரதிகளை சேர்ப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
