இந்திய விமானப்படை பயன்பாட்டிற்கு புதிதாக இறங்கப் போகும் போர் விமானங்கள்!!

By : G Pradeep
எச்ஏஎல் நிறுவனத்திலிருந்து 97 தேஜஸ் எம்கே1ஏ ரகத்தை சேர்ந்த போர் விமானங்களை இந்திய விமானப்படை பயன்பாட்டிற்காக வாங்க போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் எச்ஏஎல் நிறுவனத்துடன் 62,370 கோடி ரூபாய்க்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
2027 - 2028 ஆம் ஆண்டில் இந்த விமானத்தின் தயாரித்த வேலைகளை ஆரம்பித்து 6 ஆண்டுக்குள் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், கிட்டத்தட்ட 29 விமானங்கள் இரட்டை இருக்கைகள் கொண்டதாகவும், 64 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு உதிரி பாகங்கள் விமானம் தயாரிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் தயாரிப்பதற்காக கொடுக்கப்பட்ட ஆர்டரை விட இந்த ரக விமானங்களில் 67 பாகங்கள் புதிதாக சேர்க்கப்படும் என்றும், தேஜஸ் ரக விமானத்தில் பல உள்நாட்டு பாகங்கள் இணைக்க போவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த ரக விமானத்தை நடுவானில் இருந்து கொண்டே எரிபொருள் நிரப்பும் அளவிற்கு தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 105 விமான நிறுவனங்களுக்கு இந்த விமான தயாரிப்பு திட்டத்தில் பங்கிருப்பதாகவும், 2,207 ஊழியர்கள் தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமான தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளப் போகிறார்கள்.
இந்த விமானத்திற்கு தேவையான ஜிஇ-404 இன்ஜின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் அதனை பொருத்தி டெலிவரி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
