இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கொடுத்த பதிலடி!! பாராட்டிய செர்ஜி லாவ்ரோவ்!!

By : G Pradeep
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்தது. இவ்வாறு அதிகமாக வரி விதித்தால் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விடும் என்று நினைத்து அதிக வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்தார்.
ஆனாலும் இந்தியா தொடர்ச்சியாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டுதான் உள்ளது. இந்திய தேசத்திற்கும், இந்திய மக்களின் நலனுக்கு எது சரியானது என்பது இந்தியாவிற்கு தெரியும். உலகில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவிடம் அமெரிக்கா தன்னுடைய எண்ணெய்யை விற்க பார்க்கிறது.
இது குறித்து ஆலோசிக்க நாங்களும் தயாராக உள்ளோம். ஆனால் ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் இருந்து வாங்கும் பொருள்கள் முற்றிலும் இந்தியாவுடைய முடிவாக தான் இருக்கும். அதனால் இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவிற்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கூறியிருந்தார்.
இவ்வாறு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறி இருந்ததை தொடர்ந்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் அவருக்கு பாராட்டுகளை ஐநா சபையில் தெரிவித்திருந்தார். ஜெய்சங்கரின் பேச்சு சரியான பதிலடி என்றும், இந்தியாவின் சுயமரியாதையை நிலை நிறுத்தியுள்ளார் என்று கூறினார். இந்திய மற்றும் ரஷ்யாவின் உறவிற்கு எந்த ஒரு இடையூறும் இல்லை.
இதுபோன்ற உறவிற்கு ஏதேனும் இடையூறு இருந்தால் இந்தியா தன்னுடைய உறவு நாடை அதுவே தேர்ந்தெடுக்கும் என்று இந்திய பிரதமரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் கூறினர்.
மேலும் அமெரிக்கா இந்தியாவுடன் ஆன உறவை நீடிக்க விரும்பினால் இதுகுறித்து இந்திய ஆலோசிக்க தயாராக இருப்பதாகவும், வர்த்தக முதலீடு பொருளாதார தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் பிற நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படும் பொழுது அதுக்குரிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் இறங்கும் என்று கூறியிருக்கிறார்.
