அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட் 2023 பட்ஜெட்: பிரம்மாண்டமான மத்திய பட்ஜெட்!
அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட் 2023 பட்ஜெட் என்று நிதி அமைச்சர் கூறினார்.
By : Bharathi Latha
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய பட்ஜெட்டை தற்போது சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பொருளாதார நிலைமை பற்றி அவர் எடுத்து கூறி இருக்கிறார். குறிப்பாக இந்தியாவின் பட்ஜெட் தாக்கலில் இந்தியா மட்டும் இல்லாது உலக நாடுகளும் உற்று நோக்குகிறது. இந்த பட்ஜெட்டில் உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு வருங்கால இந்தியாவிற்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை பூர்த்தி செய்யும் விதமாக இந்த ஒரு பட்ஜெட் அமைந்து இருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுகிறார். 9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது.