Kathir News
Begin typing your search above and press return to search.

NHAI அறிவிப்பு! FASTag வாலெட்டில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க தேவை இல்லை!

NHAI அறிவிப்பு! FASTag வாலெட்டில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க தேவை இல்லை!

NHAI அறிவிப்பு! FASTag வாலெட்டில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க தேவை இல்லை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Feb 2021 5:24 PM GMT

ஃபாஸ்டேக் வாலெட்டில் குறைந்தபட்ச தொகையைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தேவையை நீக்க முடிவு செய்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது. எலக்ட்ரானிக் டோல் பிளாசாக்களில் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்வதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. தடையற்ற போக்குவரத்துச் சேவை வழங்கவும், சுங்கச்சாவடிகளில் தாமதங்களைக் குறைப்பதற்கும் FASTag பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, FASTag அக்கவுண்ட் வாலெட்டுக்கான மினிமம் பேலன்ஸ் தேவையை அகற்ற NHAI முடிவு செய்துள்ளது. இந்த மினிமம் பேலன்ஸ் என்பது பயணிகள் பிரிவுக்கான (கார், ஜீப், வேன்) பாதுகாப்பு வைப்புத்தொகையாக பயனரால் கூடுதலாக செலுத்தப்பட்டு வந்தது.

பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் கூடுதலாக, FASTag வழங்கும் வங்கிகள் FASTag வாலெட்டுகளில் கூடுதல் தொகையைச் செலுத்தவும் கட்டாயப்படுத்துவதாக NHAI தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்று விளைவாக, பல ஃபாஸ்டேக் பயனர்கள் டோல் பிளாசா வழியாக செல்ல அனுமதிக்கப் படவில்லை. அவர்களின் ஃபாஸ்டேக் வாலெட்டில் போதுமான பேலன்ஸ் இருந்தபோதிலும், இது தேவையற்ற இடையூறுகள் மற்றும் டோல் பிளாசாக்களில் தாமதத்திற்கு காரணமாக அமைந்தது என்றும் NHAI தனது அறிக்கையில் தெரிவித்தது.

ஃபாஸ்டேக் வாலெட்டில் பேலன்ஸ் எதிர்மறையாக (negative) இல்லாவிட்டால், பயனர்கள் இப்போது டோல் பிளாசாக்கள் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோல் பிளாசாவைக் கடந்த பிறகு, அக்கவுண்ட் பேலன்ஸ் எதிர்மறையாகிவிட்டால், பாதுகாப்பு வைப்புத் தொகையிலிருந்து வங்கி தொகையை மீட்டெடுக்க முடியும், அது பயனரால் அடுத்த ரீசார்ஜ் செய்யும் போது நிரப்பப்பட வேண்டும்.

2.54 கோடிக்கும் அதிகமான ஃபாஸ்டேக் பயனர்கள் மூலம், மொத்த கட்டண வசூலில் 80 சதவீதத்திற்கு ஃபாஸ்டேக் பங்களிக்கிறது. ஃபாஸ்டேக் மூலம் தினசரி சுங்க வசூல் ரூ.89 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 15, 2021 முதல் ஃபாஸ்டேக் மூலம் டோல் பிளாசாக்களுக்கான கட்டணம் கட்டாயமாகி வருவதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் 100 சதவீத பணமில்லா சுங்க சாவடிகளை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News