Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகள் போராட்டத்தால் சேதமடைந்த தில்லி மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலை - திட்டமிட்டு கூட்டத்தை அனுப்பும் விவசாய அமைப்பு!

விவசாயிகள் போராட்டத்தால் சேதமடைந்த தில்லி மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலை

விவசாயிகள் போராட்டத்தால் சேதமடைந்த தில்லி மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலை - திட்டமிட்டு கூட்டத்தை அனுப்பும் விவசாய அமைப்பு!

MuruganandhamBy : Muruganandham

  |  30 Oct 2021 1:28 PM GMT

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அக்டோபர் 29வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகள் நடத்தும் போராட்டம் காரணமாக தில்லி மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலையின் நிலையை மதிப்பாய்வு செய்த பின்னரே பயணிகளுக்காக திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சேதங்களை மதிப்பிட்டு, சாலை சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பின்னரே, சாலை பயணிகளுக்கு திறக்கப்படும் எனவும், கடந்த காலங்களில், விரைவுச்சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் ஏற்பட்ட பராமரிப்பு குறைபாடு குறித்து, காசியாபாத் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக ஏற்கனவே தெரிவித்துள்ளோம். விவசாயிகள் சாலைகளை விட்டு வெளியேறியவுடன் மதிப்பீடு மேற்கொள்ளப்படும், என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் முடித் கார்க் கூறினார்.

மின் கேபிள்களில் சேதம் ஏற்பட்டுள்ளது; போராட்டத்தின் காரணமாக UP-கேட் மேம்பாலம் பராமரிப்பு மற்றும் ஆய்வு செய்யப்படவில்லை. மழைக்காலங்களில், வடிகால் அமைப்பில் அடைப்பு ஏற்பட்டதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிட்டத்தட்ட 11 மாதங்கள் கடந்துவிட்டது, நாங்கள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடக குழு, அதிவேக நெடுஞ்சாலையை பார்வையிட்டது. UP-கேட் மேம்பாலத்தில் மேற்பரப்பில் விரிசல் இருப்பதைக் அக்குழு கண்டறிந்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டிசம்பர் மாதம் முதல் உபி கேட் மற்றும் காசியாபாத்-டெல்லி சாலையை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் கூடாரங்கள் மற்றும் மேடைகளுடன் சாலைகளில் மினி குடியிருப்புகளை அமைத்துள்ளனர். மறுபுறம், பாரதிய கிசான் யூனியன் போராட்டத்தை வலுப்படுத்த விவசாயிகள் பெருமளவில் UP-கேட் போராட்ட இடத்திற்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்து, போராட்டம் தொடரும் என்று அறிவித்தது.

82 கிலோமீட்டர் நீளமுள்ள டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வே டெல்லியை மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டுடன் இணைக்கிறது. இத்திட்டத்திற்காக ரூ.8,346 கோடி செலவிடப்படுகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News