டெல்லி: NIA அதிகாரிகளின் வேலைகளைத் தடுத்ததற்காக AAP MLA அமனத்துல்லா கான் மீது FIR பதிவு.!
டெல்லி: NIA அதிகாரிகளின் வேலைகளைத் தடுத்ததற்காக AAP MLA அமனத்துல்லா கான் மீது FIR பதிவு.!

By : Kathir Webdesk
வியாழக்கிழமை அன்று தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) அதிகாரிகள் ஜமியா நகரில் நடத்திய சோதனையைத் தடுத்ததற்காக ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமனத்துல்லா கான் மீது டெல்லி காவல்துறை FIR பதிவு செய்துள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு&காஷ்மீரில் 'தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை' செயல்படுத்த நிதி அளித்ததுக்காக சில NGO கள் மீது சோதனை நடைபெற்றது.
பொது ஊழியர்கள் தங்கள் வேலைகளைச் செய்யும்போது அதனைத் தடுத்ததற்காக கான் மீது NIA DSP குற்றம்சாட்டி ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை அன்று மத்திய புலனாய்வு அமைச்சகம் ஜமியா நகரில் டெல்லி சிறுபான்மை தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான்னின் அறக்கட்டளை உட்பட இரண்டு இடங்களில் சோதனை நடத்தியது. மேலும் ஏப்ரல் 28 இல் இந்துக்களுக்கு எதிராக அவர் கோபம் ஊட்டும் அறிக்கைகளையும் நினைவில் கொள்ளவேண்டும்.
அறக்கட்டளையை விட்டு NIA அதிகாரிகள் வெளியேரையில், AAP சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் அவர் ஆதரவாளரும் சாலையை மறித்து அதிகாரிகளை அவர்களது கடைமையைச் செய்யாமல் தடுத்துள்ளனர். இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னர் சோதனை மேற்கொள்ள டெல்லி காவல்துறை உதவியை NIA கேட்டுள்ளது.
இதற்கிடையில் ஜாபருல் இஸ்லாம் கான், அமனத்துல்லா கான்னின் ஆதரவுக்காக டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். "நேற்று எனக்காக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, குறிப்பாக அமனத்துல்லா கான்கு," என்று ட்விட் செய்துள்ளார்.
முன்னர் ஆகஸ்டில் தாஹிர் ஹுசைன் குடும்பத்தினரைப் பாதுகாக்க டெல்லி காவல்துறையை வலியுறுத்தி AAP MLA அமனத்துல்லா கான் ட்விட் செய்திருந்தார். ஹுசைன் குழந்தைகள் அவர் சிறையில் இருப்பதாலும் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாலும் பள்ளிக்குப் பணம் செலுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். டெல்லியில் பிப்ரவரி 2020 இல் கலவரத்தைத் தூண்டியதற்காகவும் மற்றும் வீட்டில் இருந்தே ஒரு கும்பலை வழி நடத்தியதற்காகவும் டெல்லி காவல்துறை ஹுசைன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
