Kathir News
Begin typing your search above and press return to search.

வேலை என்ற பெயரில் லாட்ஜில் பெண்களுக்கு நடந்த சோகம்.? இந்தியாவில் மனிதக்கடத்தலில் ஈடுபடும் பங்களாதேஷ் குடியேறிகள்..!

NIA files charge sheet against 13 Bangladeshi immigrants accused in Bengaluru human trafficking case, lured victims under pretext of jobs

வேலை என்ற பெயரில் லாட்ஜில் பெண்களுக்கு நடந்த சோகம்.? இந்தியாவில் மனிதக்கடத்தலில் ஈடுபடும் பங்களாதேஷ் குடியேறிகள்..!

NIA files charge-sheet against Bengaluru rape case accused

MuruganandhamBy : Muruganandham

  |  7 Sep 2021 3:29 AM GMT

பெங்களூருவில் பங்களாதேஷ் குடியேறிகள் சம்பந்தப்பட்ட மனித கடத்தல் வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), 13 சட்டவிரோத பங்களாதேஷ் குடியேறிகள் மீது செப்டம்பர் 6 அன்று சிறப்பு NIA நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

என்ஐஏ தனது அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்களான ரஃபிக், சோபுஜ் ஷேக், எம்டி ரஃபிக்துல் இஸ்லாம் ரிடோய், ராகிபுல் இஸ்லாம் ரிடாய், எம்டி பாபு மொல்லா மற்றும் மற்றவர்கள் மீது 120 பி ஆர்/டபிள்யூ 370, 120 பி ஆர்/டபிள்யூ 370 ஏ (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் ஜூன் 8, 2021 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது, பெங்களூரு கே சன்னசந்திராவில் வாடகை வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில், வங்காள தேசத்தைச் சேர்ந்த ஏழு பெண்களும் ஒரு குழந்தையும் காவலில் இருந்து மீட்கப்பட்டனர்.

பெங்களூரு மனித கடத்தல் வழக்கை என்ஐஏ கையகப்படுத்தியது:

விசாரணையின் படி, மேற்கூறிய பதின்மூன்று குற்றப்பத்திரிகை குற்றவாளிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தனர். வேலை வாங்கித்தருவதாகக் கூறி வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பெண்களை அழைத்துவந்தனர். பின்னர் பெண்கள் வாடகை விடுதிகளில்அடைக்கப்பட்டு பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆதார் அட்டைகள், பான் கார்டுகள் போன்ற இந்திய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக போலியான அடையாள அட்டைகளையும் உருவாக்கியுள்ளனர்.

திருப்பத்தை ஏற்ப்படுத்திய வீடியோ:

ஆரம்பகட்டத்தில், பெங்களூருவில் பங்களாதேஷ் பெண்ணை சித்ரவதை செய்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை ராமமூர்த்தி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். மே 2021 இல் அந்தப் பெண்ணின் தாக்குதலின் கொடூரமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பல மாநிலங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர். அதன் பிறகே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் 2021 இல், பெங்களூருவில் பங்களாதேஷ் பெண்ணை தாக்கிய மற்றும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியில் ஒருவர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்து தப்பிக்க முயன்றதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பெங்களூரு காவல்துறையினரால் தப்பிக்க முயன்றபோது அவரது கூட்டாளிகள் இருவர் சுடப்பட்டு காயமடைந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News