Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா முழுவதும் என்.ஐ.ஏ வேட்டை - சிக்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நிகழ்த்தி வருகிறது.

இந்தியா முழுவதும் என்.ஐ.ஏ வேட்டை - சிக்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 Sept 2022 10:11 AM IST

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நிகழ்த்தி வருகிறது.

நாட்டின் 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதத்திற்கு நிதி திரட்டல், இளைஞர்களை மூளை சலவை செய்து வன்முறைக்கு தூண்டுதல் தொடர்பாக என்.ஐ.ஏ இன்று அதிகாலை முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ள புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், கோவை, கடலூர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சோதனையில் பி.எப்.ஐ நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News