இரவு நேரம், பனிப்பொழிவு.. 5 மணி நேரம் ராணுவம் செய்த செயலுக்கு குவிந்த பாராட்டுக்கள்.!
இரவு நேரம், பனிப்பொழிவு.. 5 மணி நேரம் ராணுவம் செய்த செயலுக்கு குவிந்த பாராட்டுக்கள்.!

By : Kathir Webdesk
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 10 பேரை இந்திய ராணுவத்தினர் இரவில் 5 மணி நேரம் நடந்து சென்று மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொறுத்த வரையில் பனிப்பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது. சில பகுதிகளில் மிக கடுமையாக பனிப்பொழிந்து வருகிறது.
குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்ற மலைவாசஸ் தலங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகள் அதிக பனிப்பொழிவைப் சந்தித்து வருகிறது.
வானிலையும் தொடர்ந்து மோசமான நிலைக்கு செல்கிறது, மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், என்.எச் -244ல் சிந்தான் பாஸ் அருகே ஒரு இடத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் 10 பேர் சிக்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழு கடும் பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் சுமார் 5 மணி நேரம் இரவில் நடந்து சென்று அவர்களை பத்திரமாக மீட்டு சிந்தான் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டது.
இரவு நேரம் என்று பாராமல் பனிப்பொழி அதிகமாக பெய்யும் நேரத்திலும் பொதுமக்களை மீட்ட ராணுவத்தினருக்கு காஷ்மீர் மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
