பொதுமான நிலக்கரி கையிருப்பில் உள்ளது., ஆதாரமற்ற தகவல்களை பரப்பாதீர்கள் - நிர்மலா சீதாராமன் காட்டம் !
இந்தியாவில் நிலக்கரி கையிருப்பை பற்றி நிர்மலா சீதாரமன் விளக்கமளித்துள்ளார்.
By : TamilVani B
நிலக்கரி பற்றாகுறை இருப்பதாக தவறான செய்தி பரபரப்பபடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நிலக்கரி பற்றாகுறை இருப்பதாகவும் அதனால் மின் உற்பத்தி தடைபடும் எனவும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் இந்தியாவில் மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையா நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி பற்றாகுறை இருப்பதாக வெளிவரும் தகவல்கள் முற்றிலும் தவறான தகவல்கள் வெளிவருகின்றன. இது போன்ற ஆதாரம் அற்ற குற்ற சாட்டுகளை கூற வேண்டாம் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
இதற்கு முன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் செய்திநிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் நிலக்கரி பற்றாகுறை இல்லை என தெளிபடுத்தியது குறிப்பிடதக்கது.