Kathir News
Begin typing your search above and press return to search.

துளி முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை! கொரோனா பாதிப்பு சூழ்நிலையிலும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பல்வேறு சாதனை!

துளி முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை! கொரோனா பாதிப்பு சூழ்நிலையிலும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பல்வேறு சாதனை!

துளி முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை! கொரோனா பாதிப்பு சூழ்நிலையிலும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பல்வேறு சாதனை!

Muruganandham MBy : Muruganandham M

  |  9 Jan 2021 7:20 AM GMT

கிராம பகுதிகளில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கணக்கெடுப்பு முறைக்கு ஸ்வாமித்வா என்று பெயர். கிராமங்களில் வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு உரிமை ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் இ-நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக இ-கிராம ஸ்வராஜ் என்ற எளிமையான பஞ்சாயத்து ராஜ் செயலி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2020 ஏப்ரல் 24ம் தேதி தொடங்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு திட்டங்களின் வாயிலாக கொரோனா பாதிப்பு சூழ்நிலையிலும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பல்வேறு சாதனைகள் புரியப்பட்டுள்ளது.

162155 கிராம சபாக்கள் நடந்தன. மொத்தம் 195168 கிராம சபாக்கள் திட்டமிடப்பட்டன. அதில் 53,901 பேரின் கருத்துக்கள் பெறப்பட்டன. 49,114கிராம பங்சாயத்து வளர்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. 39 கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்கள் இ-கிராமஸ்வராஜ் இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

98 கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. பஞ்சாயத்து கணக்குகள் இணையதளம் மூலம் தணிக்கை செய்யப்பட்டன. சொத்துக்கள் ஜியோ-டேகிங் முறையில் இணைக்கப்பட்டன. கிராம பஞ்சாயத்து விரிவான வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது.

ஏழைகள் நலன் வேலை வாய்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய பஞ்சாயத்து ராஜ் விருதுகள் 2021-க்கு தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சஷாக்திகரன் புரஸ்கார், நானாஜி தேஷ்முக் தேசிய கவுரவ கிராம சபா புரஸ்கார், கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட விருது, குழந்தைகளுக்கு உதவும் வகையில் செயல்பட்ட கிராம பஞ்சாயத்து விருது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News