தமிழகத்தை பிரிக்கும் திட்டம் பற்றி மத்திய அமைச்சர் தகவல் !
தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
By : Thangavelu
தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு என்று கோவையை தலைமையிடமாக வைத்து பிரிக்க வேண்டும் என்று 10 மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது பற்றிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை பாஜக மட்டுமின்றி கொங்கு பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் விரும்பினர். இதற்கு ஒரு சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இது தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில், தமிழகம் இரண்டாக பிரிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருப்பதாக செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பற்றி தமிழக எம்.பி.க்கள் எஸ்.ராமலிங்கம், பாரிவேந்தர் உள்ளிட்டோர் எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதில் அளித்தார்.
அதில் தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: wikipedia
https://www.puthiyathalaimurai.com/newsview/111707/No-idea-for-separating-Tamil-Nadu-as-of-now-says-Central-Government