Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவர்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது.. தாய் மொழியில் தொழில்முறை கல்வி கற்கலாம்.. மத்திய அமைச்சர் தகவல்.!

மாணவர்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது.. தாய் மொழியில் தொழில்முறை கல்வி கற்கலாம்.. மத்திய அமைச்சர் தகவல்.!

மாணவர்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது.. தாய் மொழியில் தொழில்முறை கல்வி கற்கலாம்.. மத்திய அமைச்சர் தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2020 4:12 PM IST

நாடு முழுவதும் பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட படிப்புகள் ஆங்கிலத்தில்தான் பாடப்புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் தமிழ் மொழி மற்றும் பிற மொழி மாணவர்களுக்கும் இது மிகவும் சிரமமாக இருந்தது. சிலருக்கு எளிதில் ஆங்கிலம் பேசுவதற்கு மற்றும் படிப்பதற்கு கடினமாகவும் இருந்தது. இதனை போக்குவதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


அதில் முதற்கட்டமாக மாணவர்கள் பேசுகின்ற நாட்டில் உள்ள பல்வேறு வகையான தாய் மொழியில் படிப்பதற்கு வசதியாக தாய் மொழிக்கல்வியை விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளை, மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே படிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.


டெல்லியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஆங்கில மொழி சிக்கலால் தொழில்நுட்ப கல்வியை இழக்க நேரிடும் மாணவர்களை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தாய்மொழியிலேயே தொழில்முறை கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாணவர்கள் மீது எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது எனவும், ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டார்.


இந்த பாடத்திட்டங்கள் அமைந்தால் பலரும் தங்களது தாய்மொழியிலேயே உயர் படிப்புகளை படிக்கும் வசதி கிடைக்கும். அனைத்து மாணவர்களும் கல்வியை பாதியில் விடாமல் உயர்கல்வி வரை படிக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இந்த திட்டங்கள் வந்தால் அனைத்து மாணவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News