Kathir News
Begin typing your search above and press return to search.

இனி 45 நாள் கிடையாது 30 நாளில் மக்கள் குறை தீர்க்கப்பட வேண்டும் - மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு என்ன தெரியுமா?

மத்திய அரசின் இணையதளத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய கால அளவு 45 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இனி 45 நாள் கிடையாது 30 நாளில் மக்கள் குறை தீர்க்கப்பட வேண்டும் - மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு என்ன தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  30 July 2022 8:44 AM GMT

மத்திய அரசின் இணையதளத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய கால அளவு 45 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகள் துறை செயல்பட்டு வருகிறது.

இந்தத் துறை 'மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மையம்' என்ற இணைய தளத்தை நடத்தி வருகிறது. அதில் அரசு துறைகளுக்கு எதிராக பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அதில் 13 லட்சத்து 32 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன அவற்றில் 4 லட்சத்து 18 ஆயிரம் புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ள. இந்லையில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது

மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு மைய இணையதளத்தில் பெருமளவிலான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் அதன்படி அந்த இணையதளத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய அதிகபட்ச கால அளவு 45 நாட்களாக குறைக்கப்படுகிறது.

ஒருவேளை கோர்ட்டு வழக்கு அல்லது கொள்ளை முடிவு காரணமாக 30 நாட்களுக்குள் தீர்வு காண முடியாவிட்டால் பொதுமக்களுக்கு இடைக்கால பதில் ஒன்றை அளிக்க வேண்டும் புகார்கள் மீது அளிக்கப்படும். தீர்வில் பொதுமக்களுக்கு திருப்தி இல்லாவிட்டால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு .அந்த மேல்முறையீடு வராத பட்சத்தில்தான் சம்பந்தப்பட்ட புகார் முடிவடைந்து விட்டதாக கருதப்படவேண்டும்.

மேல்முறையீடு தாக்கல் செய்து அதற்கும் தீர்வு காணப்பட்ட பிறகுதான் அந்த புகார் முடிந்துவிட்டதாக கருதப்படவேண்டும். அதன் பிறகு பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

அரசின் கால் சென்டர்கள் மக்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்கலாம். அந்தக் கருத்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துடன் பகிர்ந்துகொண்டு அதன் செயல்பாட்டை மேம்படுத்தலாம். குறைதீர்ப்பு பணிகளை அமைச்சகங்கள் அவ்வப்போது கண்காணிக்கலாம்.

அனைத்து மத்திய அரசுகளும் குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு போதிய அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற புகார்களின் எண்ணிக்கையை பொறுத்து அதிகமானால் எந்த பிரச்சனைக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை அவர்களே முடிவு செய்யலாம்.

பொதுமக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Source - Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News