முஸ்லீம் ஆண்கள் 3 பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது: அசாம் முதலமைச்சர் அதிரடி!
By : Thangavelu
முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த எந்தவொரு ஆண்களும், மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் அஸ்ஸாம் அரசு மிகத்தெளிவாக உள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் அதிரடியாக கூறியுள்ளார்.
அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில், ஒரு முஸ்லீம் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ளைத் திருமணம் செய்துகொள்வது அவருடைய பிரச்சனை கிடையாது. மாற்றாக அது முஸ்லீம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பிரச்சனையாகும்.
முஸ்லீம் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு சமூதாயத்தில் கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என்றால், முத்தலாக் தடைச்சட்டத்திற்கு பின்னர் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். தற்போது இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல அரசியல் தலைவர்களிடையே பேசும் பொருளாகவும் மாறியுள்ளது.
இந்நிலையில், நேற்று அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: எந்த ஒரு முஸ்லீம் ஆணும் 3 பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது என்பதில் மாநில அரசு தெளியாக இருக்கிறது. தலாக் வேண்டாம் எனவே சட்டப்படி விவாகரத்து வழங்க வேண்டும். ஆண்களைப் போன்று பெண்களுக்கும் சொத்தில் சட்டப்படி சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். இதில் மனைவிக்கும் 50 சதவீத சொத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றார்.
Source, Image Courtesy: Vikatan