இந்தியா பால் பொருட்கள் இறக்குமதி செய்கிறதா? மத்திய அமைச்சர் கொடுத்த பதில்!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கான பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறதா?
By : Bharathi Latha
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தேவையான பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் பால்பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதன் காரணமாக அதை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பால் பொருட்கள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்து அதிக அளவில் செலவுகளை செய்து வருவதாகவும் பல்வேறு பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு டெல்லியில் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு துறை திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் தற்போது பதில் அளித்து இருக்கிறார். குறிப்பாக கால்நடை பராமரிப்பு திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ரூபாலா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இது பற்றி கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்படாது எனவும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பால் பொருட்களுக்கு தேவையான அளவு இந்தியாவில் இருப்பு இருக்கிறது. நம்மிடம் பயன்படுத்தப்படாத ஒரு பகுதி உள்ளது அதை பயன்படுத்த முயற்சிக்கவும் அதை சரியாக நிர்வகிப்போம் கவலைப்பட தேவையில்லை. உள்நாட்டில் பால் பொருட்கள் தடுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகின்றன என்ற கேள்விக்கு அது உண்மை இல்லை பால் பொருட்கள் இறக்குமதி நடைபெறாது என்று அவர் உறுதியாக தெரிவித்து இருக்கிறார். எனவே பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy:Dinamalar